தமிழில் தொடர்ந்து பதிவுகள் எழுதனுங்கறது என்னோட பல வருஷ ஆசை. ரொம்ப சோம்பேறித்தனமும், அப்புறம் தமிழ்ல டைப் பண்ணத்தெரியாததும் சேர்ந்து அந்த ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திடுச்சி.
புது வருடம்.. புது ஆரம்பம்னு... எல்லாரும் சொல்றாங்க. சரி நாமளும் அப்படியே நெனச்சு உருப்படியா இதையாச்சும் செய்யலாம்னு தோனிச்சு. அதோட இப்போ, கூகிள் மொழிப்பெயர்ப்பு கருவியைக்கொண்டு தமிழ் டைப்பிங்கும் கொஞ்சம் சுலபமா வருது
ஆக இங்கே, தமிழில் என்னுடைய மொக்கையை ஆரம்பிக்கறேன். இந்த இந்த வருசத்திலேயச்சும் மனதிற்கு திருப்தி தருகிற மாதிரி கொஞ்சமாச்சும் உருப்படியா எழுதனும் :)